• Nov 10 2024

பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் மாமன்னன்.. இரண்டாம் நாள் வசூல் நிலவரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் மாமன்னன். சமூகத்தில் இருக்கும் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் மாமன்னன்.

 உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.மேலும், உலக அளவில் 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் நாள் வசூல் 4 முதல் 5 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அடுத்து வரும் வார விடுமுறை நாட்களில் கூடுதலாக வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. உதயநிதியின் சினிமாவில் வாழ்க்கையில் மாமன்னன் திரைப்படம் ஒரு பெஸ்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. தனது கடைசிப்படத்தை நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். படம் முழுவதும் புரட்சி கருத்துடைய பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

 மேலும்,மாமன்னன் படத்தை திரையரங்கில் மக்களோடு மக்களாக பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், இந்த படம் 100 சதவீதம் வெற்றியை கொடுத்துருக்குஇக்கதையை விரிவுபடுத்தவும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார். உதயநிதிக்கு நன்றி கூறியிருந்தார் மாரி செல்வராஜ்..

Advertisement

Advertisement