இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து நேற்றைய தினம் வெளியான திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இப்படத்தின் மூலமாக அழுத்தமான ரோலில் நடிப்பதனால் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. குறிப்பாக இப்படம் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தினுடைய முதல் நாள் வசூல் விபரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் இப்படம் முதல் நாளில் மட்டுமே உலகளவில் ரூ.6 கோடிக்கு மேல் வசூலினைப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!