சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார்,
பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.
இவர் "டான்" படத்துக்கு பின், இயக்குநர் ப்ரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இப்படத்தையடுத்து ,சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார். மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தள BTS புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். MOCOBOT ரோபோட்டிக் ஆர்மை படப்பிடிப்புக்கு பயன்படுத்துவதையும் உறுதிச் செய்துள்ளார்.
மேலும் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின், ஒளிப்பதிவாளர் விது ஐயனா, நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
கணினி நிரல் அடிப்படையில் இயங்கும் Mocobot Robotic Arm, தமிழ் சினிமாவில் பீஸ்ட், விக்ரம், துணிவு திரைப்படங்களில் ஏற்கனவே ஆக்சன் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாவீரன் படத்தின் பாடல் காட்சியில் இந்த Mocobot Robotic Arm பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக மாவீரன் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
Listen News!