• Sep 21 2024

100கோடியை நெருங்கிய 'மாவீரன்'... செம குஷியில் படக்குழுவினர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன், மண்டேலா படம் மூலம் திரையுலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த வெற்றி இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் கைகோர்த்து  வெளியான திரைப்படம் தான் மாவீரன்.


இப்படமானது ஃபேண்டஸி ஜானரில் கதைக்களத்தைக் கொண்டு இருந்தாலும் மிகவும் எதார்த்தமாக ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் விதத்தில் மடோன் அஸ்வின் இயக்கியிருந்ததால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 


அதேபோல் யோகிபாபுவின் காமெடியும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் தியேட்டரில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமலும் இருந்தது. இதனால் நாளுக்கு நாள் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.


இந்நிலையில் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் கடந்த ஜுலை14-ஆம் தேதி வெளியான இப்படமானது இதுவரை உலகம் முழுவதும் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை  வசூலித்து இருக்கின்றது. அந்தவகையில் 100கோடியை நெருங்குவதற்கு இன்னும் 20கோடி மட்டுமே எஞ்சி இருப்பதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement