சினிமா ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.
உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதல் இப்படமானது வசூலை வாரிக் குவித்த வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் 25 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை வசூலித்திருந்தது. அதிலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்தது என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்த நேற்றுடன் ஆறு நாட்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 220 கோடி வரை வசூலித்துள்ளது. ஆனால் இந்த வசூல் மிகவும் குறைவான வசூல் எனப் பலரும் கூறி வருகின்றனர்.
Listen News!