ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.
இருப்பினும் உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து நேற்றைய தினம் 'அவதார் 2' திரைப்படம் வெளியாகி இருந்தது. இருப்பினும் இப்படமானது இன்று தான் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் வெளியாகியுள்ளது.
மேலும் டைட்டானிக் படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் என்பவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இணைந்து ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் என பலரும் நடித்துள்ளனர். கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
அதாவது படம் தாங்கள் எதிர்பார்த்ததை விட ஆழ்கடல் காட்சிகள் கண்களையும், மனதையும் வியப்பில் ஆழ்த்திவிட்டதாக கூறி ரசிகர்கள் இணையத்தில் #Avatar2 ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் படம் 3 மணி நேரமாக இருப்பதால், இதுதான் படத்தில் இருக்கும் ஒரே மைனஸ் என்று ஒரு சில ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் எந்தப் படம் வெளியாகினாலும் அதற்கு போஸ்டர் அடித்து பழகிப்போன நம்ம மதுரை ரசிகர்கள் அவதார் 2 திரைப்படத்திற்கும் போஸ்டர் அடித்து, அதை ஆங்காங்கே சுவரில் ஒட்டி அசத்தி உள்ளனர்.
மேலும் அந்த போஸ்டரில் "கடவுளின் அவதாரம்... அவதார் ஆன் த வே ... காந்தாரா ஓரம்போ" என்ற தலைப்புடன் .... அழிவில்லா அவதாரின் ஆத்மார்த்தமான அன்பு ரசிகர்கள் என போஸ்டர் ஒட்டி உள்ளனர். இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு போஸ்டர் ஒட்டும் ரசிகர்கள் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
Listen News!