நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் டைட்டில் டீசர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது.
அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகின்றார். மேலும் படத்தில் ஒரு பாடலுக்காக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மொத்தம் 2000 டான்ஸ்டர்கள் வரவழைக்கப்படவிருப்பதாகவும், அதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.
அதேபோல், படத்தில் சிங்கத்திற்கு முக்கியமான ரோல் ஒன்று இருக்கிறது. எனவே அதனை உருவாக்க சிஜிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்யவிருப்பதாகவும் பேச்சு எழுந்தது.இதற்கிடையே சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், "படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதுவரை சென்னையில்தானே வைத்துவருகிறோம்.
இந்த முறை தென் தமிழ்நாட்டில் இருக்கும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய ஏதேனும் ஒரு ஊரில் வைக்கலாம்" என விஜய் கூறியதாக தெரிவித்தார். இது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் நண்பன்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முதலில் ஸ்ரீவட்சன் காரெக்டரில் நடிக்க இருந்தது மதுரை முத்து தானாம்.அவர் நோ சொன்ன பின்பு தான் சத்யன் தேர்வாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!