அஜித்தின் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் இந்த ப்ராஜெக்டிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து தடம், தடையறத் தாக்க போன்ற வெற்றி மற்றும் அதிரடிப் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைகா தயாரிப்பில் அஜித் -மகிழ்திருமேனி கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படியான ஒரு நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகிய இருவரிடமும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக 'என்னை அறிந்தால்' என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல் அருண் விஜய் மகிழ்த்திருமேனி உடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக அருண் விஜய் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் இது குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
Listen News!