• Nov 10 2024

காதல் கணவருடன் இரவு நேர ஹோட்டல் புகைப்படத்தைப் பகிர்ந்த மஹாலட்சுமி...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சினிமா விமர்சகர், மற்றும் தயாரிப்பாளராக இருந்து வந்த ஒருவரே ரவீந்தர். அதேபோன்று சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தவர் தான் மகாலட்சுமி. இவ்வாறாக சின்னத்திரைப் பிரபலங்களின் உடைய திருமண வரிசையில் அதிகளவில் பேசப்பட்ட திருமணம் என்றால் அது ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் திருமணம் தான். 


மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் நிலையில் மகாலட்சுமி விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.


அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து பின்னர் அது பல வகையிலும், பலராலும் சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும் அத்தகைய விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது ரவீந்தர் உடல் எடையை பொருட்படுத்தாது அவரை திருமணம் செய்து கொண்டமைக்காக பலரும் மகாலட்சுமிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.


ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருவது வழமை. அந்தவகையில் தற்போதும் இவர்கள் இருவரும் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து உணவு உண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். அப்புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement