• Nov 10 2024

கம்பி எண்ணும் கணவன்... சிரித்த முகத்துடன் புகைப்படங்களை வெளியிட்ட மகாலட்சுமி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரனை திடீரென திருமணம் செய்து கொண்டார். 


அந்தவகையில் இவர்கள் இருவரது திருமணமும் திருப்பதியில் மிகவும் எளிமையாக இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் இடம்பெற்றது.

ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி திருமணம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் இவ்வாறான விமர்சனங்களுக்கு இந்தத் தம்பதியினர் செவி சாய்க்காது தங்களது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கடந்த 7-ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


தற்போது ரவீந்தர் சிறையில் வாடி வருகின்ற நிலையில், மனைவி மகாலட்சுமியோ வழமை போன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் புது சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் தான் இருக்கின்றார்.


அந்த வகையில் தற்போதும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றன. 


Advertisement

Advertisement