• Nov 14 2024

பழைய காதலனை திடீரென சந்திக்கும் மகாலட்சுமி! சேதுவை விட்டு பிரிவாரா..? அதிரடியான திருப்பங்களுடன் சீதா ராமன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சீரியல்களில் சீதா ராமன் சீரியல் ரசிகர்களால்  விரும்பி பார்க்கப்படுகின்றது. இத் தொடர் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் தற்பொழுது ஔிபரப்பாகி வருகின்றது. 

சீதா ராமன் தொடரின் இறுதி நாளுக்கான எபிசோட் வெளியாகிய நிலையில், இனி வரும் நாட்கள் மகாலக்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிகின்றது.

அதன்படி, குறித்த எபிசோட்டில், வீட்டில் இருந்து பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு உணவருந்த செல்கிறார் மகா. அங்கு சென்றவர் 'சாப்பிடுறதுக்கு உடனே என்ன இருக்கோ அத கொண்டு வா' என வெயிட்டருக்கு சொல்லுகிறார். சாப்பாடு வரும் வரையில் வீட்டில் நடந்த சம்பவங்களை எண்ணி குழப்பத்தில் இருக்கிறார்.

அந்த சமயத்தில் கேசரி கொண்டு வந்து கொடுக்கிறார் வெயிட்டர். அதை பார்த்த மகா, 'கேசரியா' என்டு இழுக்க 'ஆமா அது உங்களுக்கு பிடிச்ச கலர் பவுடர் போடாத கேசரி' என சொல்லுகிறார் வெயிட்டர்.  'எனக்கு அதுபிடிக்கும் என்டு உனக்கு யார் சொன்னது' என அவர் முகத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் மகா. காரணம் அங்கிருந்தது அவரது முன்னாள் காதலன்.


இறுதியில், காதலிக்கும் போது இருவரும் சேர்ந்து குறித்த ஹோட்டலுக்கு வந்த காட்சிகளை மீட்டி பார்க்கிறார் மகா . இதையடுத்து 'உன்னோட பேசணும்' என்டு இருவரும் தனியாக கதைக்கச் செல்கின்றனர். 


அங்கு முன்னாள் காதலனின் நிலை கண்டு மன வருத்தத்துடன், 'ஏன் இப்படி இருக்க? அம்மா, அப்பா எப்படி இருக்காங்க, உன்ட வைப், பிள்ளைகள் எப்படி இருக்காங்க' என்டு விசாரிக்கிறார் மகா. இதற்கு, 'அம்மா, அப்பா என் கூட இல்ல. என்ன விட்டு போய்டுங்க.. நான் இன்னும் கல்யாணமும் பண்ணல என்டு' அவர்  சொல்ல, 'ஏன் என்ன நடந்த என்டு' வினாவுகிறார் மகா. 'உன்ன மறக்க முடியாம நான் குடிக்கு அடிமையாகிட்டன். என்ட நிலைய பாத்து கவலப்பட்டே அவங்க இறந்துட்டாங்க' என்றார்.


'நான் உன்னட்ட கேட்டு தானே கல்யாணம் செய்தேன் என்டு' கூறுகிறார் மகா, இறுதியாக அவரிடம் பணக்கட்டு ஒன்றை கொடுத்து 'நல்ல உடுப்பு வாங்கி போடு, நாளைக்கு ஏன் கம்பெனிக்கு வா ஒரு நண்பியா நான் உன்கூட இருப்பன்' என்டு சொல்லிச் செல்கிறார் மகாலக்சுமி. இதுதான் இறுதி எபிசோட்டின் கதை. 

சீதா ராமன் சீரியலில் இனி வரும் நாட்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உண்மை.


Advertisement

Advertisement