• Nov 11 2024

ரவீந்தரிடம் மஹாலட்சுமி போட்ட கண்டீஷன்; அப்படி சொல்லவே அவர் மகன் தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மஹாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் திருமணம் செய்தது தற்போது வரை இணையத்தில் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது.


ஊர் உலகிற்கே தெரியாமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்த பின்பே திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ள மஹாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் ஜோடி தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக். திருமணம் செய்து கொண்ட கையேடு இருவரும் சேர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு அடுக்கடுக்காய் பேட்டி கொடுத்து வருகிறார்கள். 


அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மஹாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, உங்களுடன் நான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும், வயது, மற்றும் பிற காரணங்களுக்காக நோ சொல்லிவிட கூடாது என்று கண்டீஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டாராம். 

அத்தோடு தன்னுடைய இந்த முடிவுக்கு ரவீந்தர் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்தது மட்டும் இன்றி, ரவீந்தர் வீட்டு குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டதாக சொல்லியுள்ளனர்.

மஹாலக்ஷ்மி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் அவருடைய மகன் சச்சின் தானாம். மேலும் அவர் தன்னுடன் படிக்கும் சகா மாணவர்களுக்கு தம்பி, தங்கை போன்றவர்கள் இருப்பதை பார்த்து, தனக்கும், தப்பி, தங்கைகள் வேண்டும் என ஆசைப்படுவாராம். இந்த ஆசையை நிறைவேற்ற கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.


ரவீந்தரும், மஹாவின் இந்த முடிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தான் தருகிறது. தலை தீபாவளி இன்டர்வியூ கொடுத்த பின்னர், குழந்தையோடு தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகைகள் சிலர் அழகு குறைந்துவிடும் என்பதற்காக சமீப காலமாக, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், மஹாலட்சுமி குழந்தை பெற்றுக்கொள்ளவேன் என கூறியுள்ளதற்கு பலரையும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement