• Sep 20 2024

மகாலக்ஷ்மியின் ஒரு மாச சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா; வெளியானது முழு சொத்து விபரம்..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூஸிக்கில் விஜேவாக கெரியரை தொடங்கியவர் விஜே மகாலக்ஷ்மி. பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அன்பே வா, மகராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் மகாலக்ஷ்மி.

எனினும் தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மகாலக்ஷ்மி.ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. அனிலுக்கும் மகாலக்ஷ்மிக்கும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றார்கள்.



இதனை தொடர்ந்து, சீரியல் நடிகையான ஜெய்ஸ்ரீயின் கணவரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிகருமான ஈஸ்வருடன் மகாலக்ஷ்மி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக ஜெய்ஸ்ரீ குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தனது கணவர் ஈஸ்வர் மீதும் மகாலக்ஷ்மி மீதும் ஜெய்ஸ்ரீ போலீஸில் புகாரளித்தார்.



இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு  பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.அத்தோடு  திருமணமான தகவலை திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அறிவித்தனர்.



திருமணம் செய்தி தமிழ் சினிமாவையையே அதிரவைத்த நிலையில் திருமணம் குறித்து சில விளக்கங்களை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கூறி வருகிறார்.அத்தோடு திருமணம் முடிந்த 5 நாட்களில் மகாபலிபுரம் ரெசாட்டிற்கு ஹனிமுன் சென்று புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.


எனினும் தற்போது மகாலக்ஷ்மியின் சொத்து மதிப்பும், மாத வருமான தகவலும் வெளியாகியுள்ளது. அத்தோடு சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி இதுவரையில் ஒரு மாதத்திற்கு 3 அல்லது 4 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். அதேபோல் அவரது சொத்து மதிப்பு 3 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில்  அவரது கணவர் தயாரிப்பாளர் ரவிந்தரின் சொத்து மதிப்பு 22 கோடிக்கும் மேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.




Advertisement

Advertisement