சர்காருவாரி பாட்டா திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் படம் குண்டூர் காரம்…த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே ஜன்வாடாவில் நடந்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இதற்கும் கதை ராஜமௌலியின் அப்பாதான்.
இந்நிலையில், மகேஷ் பாபு ரேஞ்ச் ரோவர் எஸ்வி என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.இது படத்துக்காகவா இல்லை அவரின் சொந்த பயனுக்கா என்ற கேள்வியும் எழுந்தது.
ரூ.5.4 கோடி மதிப்புள்ள இந்தக் காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!