• Nov 14 2024

மூச்சுத் திணறலால் உயிரிழந்த பிரபல நடிகர்... இரங்கல் தெரிவித்த மகேஷ்பாபு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகல. குறிப்பாக அதில் வரும் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. 


அதுமட்டுமல்லாது 'பெரியார்' படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சத்யநாராயணா தனது 60 ஆண்டுகால வாழ்க்கையில் வில்லன், குணச்சித்திரக் கலைஞர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் 1959 ஆம் ஆண்டு 'செப்பை கூத்துரு' படத்தின் மூலம் தான் திரையுலகில் நுழைந்தார். மேலும் 2019-இல் கடைசியாக 'மகரிஷி' படத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறாக தயாரிப்பாளர், டைரக்டர் என பன்முகதன்மை கொண்டவரான ஸ்ரீ கைகாலா சத்தியநாராயணா இன்று காலை காலமானார். அதாவது 86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். 


இந்த நிலையில் தான் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனல் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 

இவரின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மகேஷ்பாபும் தனது இரங்கலை தெரிவித்து இருக்கின்றார். அதாவது "கைகாலா சத்யநாராயணா காலமான செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவருடன் பணியாற்றிய சில அன்பான நினைவுகள் எனக்கு உள்ளன. அவரை மிஸ் பண்ணுகிறேன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" டுவிட்டர் பதிவின் மூலமாகத் தெரிவித்து இருக்கின்றார். 


Advertisement

Advertisement