• Sep 20 2024

மேலாடை இன்றி நீச்சல் குளத்தில் உல்லாசம்... புகைப்படம் வெளியிட்ட மகேஷ் பாபுவின் மனைவி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. இவர் அதிகளவில் பிரபலமானது தெலுங்கு சினிமா மூலமாகத்தான். இதனால் தான் "தமிழுக்கு விஜய்யை போல தெலுங்கிற்கு மகேஷ் பாபு" என சிறப்பித்து  கூறுவார்கள். ஏனெனில் தமிழில் விஜய் நடித்து மாபெரும் வெற்றியடைந்த 'கில்லி, போக்கிரி' போன்ற படங்கள் தெலுங்கில் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியாகிய படங்களின் ரீமேக்குகள் தான். 



சிறுவர்கள், பெரியோர்கள் என வயது வித்தியாசமின்றி இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர் 6 நந்தி விருதுகளையும், 2 பிலிம்பேர் விருதுகளையும் வென்றிருக்கின்றார். இவ்வாறாக படங்களில் தந்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த மகேஷ்பாபு இந்தித் திரைப்பட நடிகையான நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். மேலும் இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவராகவும் உள்ளார்.



மகேஷ் பாபு மட்டுமன்றி இவரது மனைவியும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவே இருந்து வருவார். தமது குடும்பப் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்கள். அந்தவகையில் தற்போது இவரது மனைவி தனது இன்ஸ்டா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.



அதில் அவரது கணவர் மகேஷ் பாபு மேலாடை இன்றி நீச்சல் குளத்தில் நீராடி கொண்டிருக்கின்றார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் கமெண்டுகளால் கிண்டலடித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement