விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுமம் தனித்திறமையுடன் விளையாடி வருகின்றனர். இருப்பினும் வீட்டில் ஏதாவது பிரச்சினை நடந்தால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பவர் தான் விக்ரமன்.
அதனாலேயே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் இவரை பிடிக்காது.அதில் மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி இருவரும் விக்கிரமனை வேண்டுமென்றே சீண்டி பார்ப்பது ரசிகர்களை எரிச்சல்படுத்தி வருகின்றனர்.நேற்றைய நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் விக்ரமனை மைனா நந்தினி சரமாரியாக கேள்வி எழுப்பி சண்டைக்கு சென்றார்.
தற்போது டிவி சேனல்களாக மாறியிருக்கும் பிக் பாஸ் வீட்டில் மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு டீமாக இருக்கின்றனர். விக்ரமன், ரட்சிதா உள்ளிட்டோர் எதிரணியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இருடீமுக்கும் இடையில் விவாதம் நடந்தது.
இப்படியாக நடந்த சண்டையில் மகேஸ்வரியும் தன் பங்குக்கு விக்ரமனை நக்கல் செய்யும் விதமாக vன்ன பண்ணுவீங்க விக்ரம் என்ன பண்ணுவீங்க என்று நக்கலாகக் கேட்டுள்ளார். இதைப்பார்க்கும் அனைவருக்குமே சற்று ஓவராக தெரிந்தது. அந்த வகையில் நேற்று இருவருமே பஜாரி ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை தனக்கு எதிராக வந்தாலும் அதை அமைதியாகவே கையாண்டு வரும் விக்ரமன் சில நேரங்களில் அதை தாங்காமல் வெடிக்கவும் செய்கிறார்.இதை பார்க்கும் போது கடந்த சீசனில் ஆரியை அன்பு குரூப் அதாவது அர்ச்சனாவின் டீம் பழிவாங்கும் விதமாக நடந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது. அந்த வகையில் அப்போது ஆரிக்கு கிடைத்த ஆதரவை போன்றே இப்போது விக்ரமனுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
Listen News!