• Nov 19 2024

பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: நடிகை மும்தாஜ் வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மோனிஷா என் மோனலிசா மற்றும் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடத்தே பிரபலமானவர் நடிகை மும்தாஜ். மேலும் இவர் அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள 'எச்' பிளாக் பகுதியில் சகோதரனுடன் வசிக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகை மும்தாஜ் வீட்டில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன் (23) என்பவர் கடந்த 6 வருடங்களாக பணிப் பெண்ணாக வேலை பார்த்து வருகின்றார். இவர் வீட்டில் இருந்து வெளியே வந்து சாலையில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் 100க்கு கால் செய்து இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணாநகர் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் விசாரணையில் முஜூதீன் மற்றும் அவரது தங்கை அங்கு பணிப்பெண்களாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், கடந்த சில மாதங்களாக தனக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் மேலும் மொபைல் போன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கும் அனுமதி அளிக்கவில்லை எனவும் அதனால் எனக்கு அங்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை எனவும் தன்னை தனது பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை மும்தாஜ் வீட்டிற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில், "அவரது தங்கையும் இங்கு பணிபுரிந்து வருவதாகவும், அக்கா தங்கை பிரச்னையில் அவர் இங்கிருந்து செல்ல நினைப்பதாகவும் இருவரையும் நாங்கள் எங்கள் வீட்டு பெண்களாகவே கருதி வருவதாகவும் நடிகை மும்தாஜ் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் தங்கையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண், தான் நடிகை மும்தாஜ் வீட்டிலேயே தங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முஜூதீனை மீட்ட அண்ணாநகர் போலீசார் பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து சென்னைக்கு வர சொல்லி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த பணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/embed/9CoRnZV-tsk

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement