• Sep 21 2024

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே அசீம் இருந்த போது மிரட்டிய முக்கிய ஹவுஸ்மேட்ஸ்- வெளியாகிய உண்மை

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், "மக்களுடன் அசீம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டார். அப்போது அவருடன் பிக் வீட்டில் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில், பிக் பாஸ் வீட்டிற்குள் ஏதாவது ஒரு தருணத்தில், அசீம் ஏன் இப்படி செய்கிறார் என தோன்றியதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.இது பற்றி பேசிய,மணிகண்டா, "எனக்கு என்னன்னா இவன் டாஸ்க்ல வந்து ரொம்ப சைலன்ட்டா இருப்பான். வந்து விளையாடுறா, எனக்கு அப்பதான் ஒரு போட்டியே கிடைக்கும்ன்னு நான் சொன்னா, 'இல்ல மச்சான் எனக்கு எங்க விளையாடணுமோ அங்க விளையாடுவேன்னு' சொல்லுவான். அப்ப புரியல, இப்ப புரியுது" என சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.


அதே போல, பிக் பாஸ் வீட்டுக்குள் நிறைய பேர் இருந்தாலும் தனியாக இருப்பது போல் அசீம் ஃபீல் செய்ததாகவும், ஒரு சில முறை துக்கத்துடன் தனியாக அசீம் நின்றது தொடர்பான வீடியோக்கள் வெளியே பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனதாகவும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்படது. அப்போது பேசிய அசல் கோலார், "அது ஃபீல் பண்ணல அடுத்து என்ன பண்ணலாம் நீ யோசிச்சிட்டு இருந்துருப்பாரு" என ஜாலியாக அசீமை குறிப்பிட்டார்


தொடர்ந்து பேசிய அசீம், "திருப்பி வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வந்த அசல் கோலார், யாருக்குமே தெரியாம தனியா கூட்டிட்டு போய் என்ன மிரட்ட எல்லாம் செஞ்சான். 'இதுக்கு மேல வாய தொறந்தே அண்ணான்னு கூட பாக்க மாட்டேன். அடிச்சு சாவடிச்சிடுவேன். அப்படியே கம்முனு இருன்னு' எல்லாம் சொன்னான்.


அது மாதிரி மணிகண்டாவும், பேசாம இருடா நீ எதுவுமே பேசாத. ரெண்டு வாரம் எதுவும் பேசிடாதடான்னு சொன்னான். முட்டை சண்டை வந்தப்போ கூட ரெண்டு வாரம் பட்டினி கிடந்தாலும் பரவாயில்ல, நீ ஏதும் பேசிடாதன்னு மணி சொன்னான். என்னதான் வெளியே இருந்து பேசுவாங்க, ஆனா அந்த வீட்டுக்குள்ள ஏதோ நம்மள பண்ணும்" எனக்கூறிய அசீம், பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் மூலமாக எப்படி வேண்டுமானாலும் ட்விஸ்ட் நடக்கும் என்பதற்கு சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார்.

Advertisement

Advertisement