• Sep 20 2024

அமுதவாணனிடம் சண்டையிட்ட மைனா நந்தினி..ADK சொன்ன பதில்..நடந்தது என்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து சண்டைக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 66ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.

அதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த வாரத்திற்கான சொர்க்கமா..நரகமா டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் உள்ளவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளனர். கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கிற்காக வீட்டில் சிறு கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. 

அதற்குள் நரகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதிக நேரம் சைக்கிள் பேடலில் செய்பவர் சொர்க்கத்திற்கு வரலாம், அதேபோல குறுக்குவழியில் சிறிய கூண்டை திறந்து கொண்டும் சொர்க்கத்திற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

அதாவது அமுதவாணனுக்கும் மைனா நந்தினிக்கும் இடையில் ஒரு சின்ன பிரச்சனை வெடித்தது.அதில் மைனா நந்தினி நரகத்தில் உள்ளார்.அவருக்கு மட்டும் கை எல்லாம் கட்டி தப்பிக்க முடியாத அளவிற்கு அமுதவாணன் செய்தார்.ஆனால் ஜனனிக்கு அப்பிடி செய்வில்லை. இதை எதிர்த்து மைனா நந்தினி கேள்வி கேட்டார்.பாராபட்சம் பார்த்து தான் அவர் செய்தார்.

அவ்வாறு கேள்வி கேட்கும் போது நான் அப்பிடித் தான் செய்வேன் என அமுதவாணன் கூறுகின்றார்.இதனால் மைனா நந்தினி கை தட்டி சிரிக்க அமுதவாணன் கடுப்பாகின்றார்.

இவ்வாறுஇருக்கை தனலட்சும் ஜனனி இருவரும் ஏஞ்சலாக மாறி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிடுகிறார்.இதன் பிறகு தனலட்சுமி அசீமை வெறுப்பேற்றி விடுகின்றார்.

அதன் பிறகு பிக்பாஸ் ஒரு குட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டது.அதாவது குட்டி பசங்களுக்கு கேக்கிற கேள்வி எல்லாம் கேட்கப்பட்டது.அதில் விக்ரமனுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு எல்லாம் அசீம் பதில் கூறிவிட்டு தனக்கு கேட்ட கேள்விக்கு கோட்டை விட்டார்.ஆனால் விக்ரமன் எல்லா கேள்விக்கும் சூப்பராக பதிலளித்தார்.பலரும் தமக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்து கொண்டு தவறாக பதிலளித்தார்கள்.

அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை பைனலிஸ்ட் போவர்கள் யார் என கேட்டு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.அதில் விக்ரமன் ,கதிரவன், ரச்சிதா என மூவரையும் ADK கூறி இருந்தார்.தனலட்சுமி அசீம் பைனலிஸ்ட் ஆக வருவார் என கூறி இருந்தார்.இவ்வாறாக இந்த எபிசோட் முடிவடைந்தது.மேலும் முழு விபரத்தை அறிய கீழுள்ள வீடியோ இணைப்பை பார்க்கவும்...






Advertisement

Advertisement