• Nov 10 2024

முதன் முறையாக பொங்கி எழுந்த மைனா நந்தினி...திருதிருவென முழிக்கும் விக்ரமன்..வெளியான ப்ரமோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி  தற்போது 77 நாட்களை கடந்து இருக்கிறது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி,ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 

21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 9 போட்டியாளர்கள் மட்டும் உள்ளே இருக்கின்றனர்.அத்தோடு மைனா நந்தினியை விட தனலக்ஷ்மி நன்றாகத் தானே விளையாடி வந்தார். அவருக்கு இப்படிப் போய் பண்ணுவீர்களா என்று கேட்டு வருகின்றனர். அத்தோடு கமல் விக்ரமனுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசி வருவதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகின்றது.அப்பொழுது விக்ரமன் மைனாவை நோமினேட் பண்ணி ரெட் கார்ட் கொடுக்கின்றார்.அதற்கு மைனாவும் வெளியில் வந்து ஏன் என்னை நோமினேட் செய்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விக்ரமனும் விளக்கம் கொடுக்கின்றார்.நான் செய்தா மட்டும் தப்பு ஷிவன் செய்தா தப்பு இல்லையா என விக்ரமனை விளாசி தள்ளுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement