• Nov 19 2024

மனைவி இல்லாமல் திருமண நாளைக் கொண்டாடிய மைனா நந்தினியின் கணவர்- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் மைனா நந்தினி. இவர் இந்த நிகழ்ச்சியில் காமெடியில் பேசி வந்தாலும் ஹவுஸ்மேட்களுடன் அடிக்கடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றார். மகேஷ்வரியுடன் நல்ல நட்பிலும் இருந்து வருகின்றார்.


மேலும் தவிர்க்க முடியாத போட்டியாளராக இருந்த வரும் இவர் டாஃப் 5 பைனலிஸ்ட்டில் இடம் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில் இவரது கணவரும் சீரியல் நடிகருமான யோகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு திருமண வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த திருமண நாளில் மைனாவை மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார்.இவரின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 


மைனா நந்தினி விஜய் டிவி பிரபலமாக இருப்பதால் அவரை ஈஸியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என சில நெட்டிசன்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement