• Nov 17 2024

அண்டப்புளுகன் என அசீமைத் தாறுமாறாகத் திட்டிய மைனா... எல்லாம் அந்தக் கரட்டால வந்த பிரச்சினை தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான நிலையில் தற்போது 4ஆவது வாரத்தை வெற்றிகரமாக தொட்டுள்ளது. இதில் 3 போட்டியாளர்கள் வெளியாகிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்களே எஞ்சி உள்ளனர். 


இப்போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவரே அசீம். இவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொள்ளும் விதமானது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது. இதனால ஓரிரு வாரங்களாக அவரை வெளுத்து வாங்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் ஏனைய போட்டியாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது சற்றுக் குறைவாகவே இருக்கின்றது. இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதில் அவர் 10 கரட்டை சீவுவதற்காக எடுத்து விட்டு அதில் அரைவாசியை சாப்பிட்ட வண்ணம் இருக்கின்றார். அதனைப் பார்த்த மகேஸ்வரி உடனே "10 கரட் எடுத்தீங்க அதில இப்போ 5 கரட் தான் மிச்சம் பொரியலுக்குப் போகும் போல இருக்கு" எனக் கூறுகின்றார். 


அதற்கு உடனே அசீம் " 2,3 கரட் கெட்டுப் போய்டிச்சு" எனக் கூறுகின்றார். அதனைப் பார்த்த மைனா "இவன் குழந்தைகளை விட ரொம்ப மோசமாக பண்ணுறான்டா, திண்டிட்டு கெட்டுப் போய்டிச்சு என்று சொல்லுறான்," என்கிறார். 


அதற்கு அசீம் "உண்மையிலும் கெட்டுப் போய்டிச்சு' என்கிறார். அதற்கு உடனே மைனா "கெட்டுப் போனதை ஏன் நீ சாப்பிடுறாய், நீ ஒரு பொய்ப் புளுவிடா, அண்டப் புளுகண்டா" என அசீமைத் திட்டுகின்றார். அதற்கு அசீம் "உன் நண்பனாக இருந்தால் அப்படித் தானே பண்ணுவேன்" என சிரிச்சுக்கிட்டே பதிலளிக்கின்றார். இதனை வைத்தே ரசிகர்கள் பலரும் இவரை கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement