• Sep 20 2024

மைனா பகிர்ந்த புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி. அன்று முதல் இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு தற்போது வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.

மைனா நந்தினிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இதன் பின்னர் நடிகை மைனா சீரியல் இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஸ்வரன் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணமும் செய்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற மைனா நந்தினி அவரது கணவருடன் இணைந்து ‘மைனா விங்ஸ்’ என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் மைனா நந்தினி புதிய கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement