• Sep 20 2024

ராட்சஸ மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகியுள்ளது.இப்படம் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.இப்படத்தில் விக்ரம் ஜெயம் ரவி த்ரிஷா கார்த்தி ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமீபத்தில் வெளிவந்த ராட்சஸ மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த மேக்கிங் வீடியோ இதோ…  






Advertisement

Advertisement