மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. பல படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள உச்ச நட்சத்திரமான மோகன்லால் உடன் கைக்கோர்த்துள்ளார்.
அந்தவகையில் 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற இந்தப் படம் சரித்திரப் பின்னணியில் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
மேலும் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதனையடுத்து முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ஏப்.14 வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
அதாவது மோகன் லால் ஆக்ரோஷமாக கயிறு ஒன்றைத் தாங்கிப் பிடித்து இழுத்தபடி இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்தார். இந்நிலையில் மலையாளத் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட முதல் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் எனும் சாதனையை மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் படைத்துள்ளது.
அந்தவகையில் 24 மணி நேரத்தில் இந்த போஸ்டர் 10.7ஆயிரம் ரீட்வீட்களைப் பெற்றுள்ள நிலையில், இதனை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்தோடு மோகன்லாலுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
Listen News!