இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் காஃபி வித் காதல்.இப்படமானது வரும் அக்டோபர் மாதம் 7-ந் தேதி திரையடங்குகளில் ரிலீசாக உள்ளது.இப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், சஞ்சிதா ஷெட்டி, டிடி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அவ்னி பிக்சர்ஸ் சார்பாக குஷ்பு இப்படத்தை தயாரித்து உள்ளார்.அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் பேசிய சுந்தர் சி, படத்தில் நடித்த நடிகைகள் குறித்தும், ஷூட்டிங்கின் போது அவர்கள் செய்த கலாட்டாவான விஷயங்கள் குறித்தும் பேசினார். அப்போது நடிகை மாளவிகா சர்மா குறித்து பேசும்போது, அவர் ஒரு டேமேஜ் ஹீரோயின் என கிண்டலடித்தார் சுந்தர் சி.
அதாவது ஆக்ஷன் படத்துல ஹீரோவுக்கு நிறைய அடிபடும். ஆனா ஒரு ரொமாண்டிக் படத்துல அதிகம் அடிபட்ட நடிகைனா அது மாளவிகா சர்மா தான். படத்துல நிறைய சீன் அவங்க இல்லாம எடுக்க வேண்டியதா போச்சு. ஒருநாள் வருவாங்க சார் கண்ணுல அடிபட்டிடுச்சுனு சொல்லி லீவு போட்டிவாங்க. அது சரியாகி வந்தப்போ, மேக் அப் மேன் தலைக்கு போடுற க்ரீமை கைக்கு போட்டுவிட்டுட்டான். அதனால் கையெல்லாம் வீங்கிடுச்சு.
அதுமாதிரி ஒரு சாங் ஷூட் பண்ணப்போ, முட்டி வீங்கிடுச்சு. படம் முழுக்க ஒரு டேமேஜ் ஹீரோயினா தான் இருந்தாங்க. அவுங்க வக்கீல்னு வேற சொன்னாங்க. பயங்கரமா சட்டம் பேசுவாங்கனு பார்த்தா, ரொம்ப அப்ராணியா இருந்தாங்க” என சுந்தர் சி கூறினார்.இதைக் கேட்ட பலரும் புன்னகைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!