• Sep 20 2024

அந்த மாதிரி போட்டோ கேட்ட நபருக்கு உடனே அனுப்பிய மாளவிகா மோகனன்-ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என்னும் படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இதன் பின்பு தனுஷுடன் இணைந்து மாறன் என்னும் படத்தில் நடித்தார். இது தவிர தெலுங்கு, ஹிந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அதிப்பதையும் கவர்ச்சி புகைப்படங்கள் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்

இந்நிலையில் தற்போது Tauba என்ற ஆல்பம் பாடலில் மாளவிகா நடித்து இருக்கிறார். அந்த பாடல் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் உடன் ட்விட்டரில் மாளவிகா உரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.

மேலும் ஒருவர் கொஞ்சம் எல்லை மீறி மாளவிகாவிடம் அவரது பிகினி போட்டோவை வெளியிடும்படி கேட்டிருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மாளவிகாவும் பிகினி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement