• Nov 17 2024

முடிவுக்கு வந்த தங்கலான் படத்தின் ஷுட்டிங்- விக்ரமுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகை பொருத்தவரையிலும் தங்கள் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக பல சிரத்தை மேற்கொண்டு நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்களுக்காக பலதரப்பட்ட ரிஸ்க்கான வேலைகளில் ஈடுபட்டு, மிகவும் தனித்துவம் வாய்ந்த நடிகராக, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை புகழின் உச்சியில் இருக்கிறார். 


அந்த வகையில் கமலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு "குட்டி கமலாக" இயங்கி வரும் ஒரு நடிகர் தான் "சியான்" விக்ரம். ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவிற்குள் நுழைந்து, இன்று தனக்கென்று தனி ரசிகர் கூட்டம் கொண்டுள்ள ஒரு சிறந்த நடிகர் அவர். தற்பொழுது முதல் முறையாக பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வருகின்றார். 

ரஞ்சித் இயக்கி வரும் "தங்கலான்" திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பிரபல நடிகர் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 


இந்த நிலையில் இப்படத்தின் ஷுட்டிங் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை படக்குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement