அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் மலையாள நடிகர் மேத்யூ தோமஸ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் கிறிஸ்டி ஆல்வின் ஹென்றியின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது என்றே கூறலாம். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மாளவிகா மோகனன் விக்ரமுக்கு ஜோடியாக “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் வித்தியாசமான உடைகளை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடல் கோர்ட் ஷூட்டில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!