• Nov 10 2024

அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு கூட போக முடியாமல் இருந்த மலேசியா வாசுதேவன்- எல்லாம் சினிமா தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 8000த்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி இருக்கும் பாடகர் தான் மலேசியா வாசுதேவன். இவர் இரத்தப்பேய் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடிகனாக அறிமுகமானார். இதனை அடுத்து பல விளம்பரங்களிலும் நடித்திருக்கின்றார்.

அதுமட்டுமில்லாமல் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.பாடுவதையும் தாண்டி இசையமைப்பாளராகவும் மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


மலேசியாவில் இருந்து 1965 ஆம் ஆண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருக்கிறார் வாசுதேவன். அங்கு இருந்து வந்ததுமே தன்னுடைய பாஸ் போர்ட்டை கிழித்து போட்டுவிட்டாராம்.

ஏனெனில் திரும்பவும் மலேசியா போகவேண்டும் என்றால் ஒரு சினிமாவில் சாதித்த பிறகு தான் போக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வைத்து அதை கிழித்துப் போட்டிருக்கிறார். அதன் விளைவு மலேசியா வாசுதேவனின் தாயார் தயாளு என்பவர் மரணமடைய மலேசியா வாசுதேவனால் போகமுடியவில்லையாம்.


இருந்த பாஸ்போர்ட்டை கிழித்து போட்டதால் நினைத்த நேரத்தில் அவரின் இறுதிச் சடங்கை கூட மலேசியா வாசுதேவனால் செய்ய முடியாமல் போய்விட்டது. எந்தளவுக்கு சினிமா மீது அன்பு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement