• Sep 21 2024

படப்பிடிப்பின் இறுதி நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய மாமன்னன் படக்குழு-யாரெல்லாம் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இறுதியாக கர்ணன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மாமன்னன் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகின்றார். இவருடன், கீர்த்தி சுரேஷ், , வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புப் பணிகள் யாவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாள் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இதனால் படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement