கடந்த 2021-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘தி கிரேட் இந்தியன்’. இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் வெளியாகிய இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு விமர்சனம் ரீதியாகவும் பாராட்டப்பட்டது.
இதனை அடுத்து இயக்குநர் ஜோ பேபி மம்மூட்டி நடிப்பில் உருவாகும் ‘காதல் தி கோர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகின்றார்.இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார். மம்மூட்டி சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கோலஞ்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காதல் மையப்படுத்தி குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு சூர்யா சென்றிருந்ததோடு அங்கு மம்முட்டியுடன் இணைந்து பிரியாணி சமைத்தது எல்லாம் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!