• Sep 20 2024

இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழும் மம்முட்டிக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த கவுரவம்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மம்முட்டிக்கு, ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது.

அவரது கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டு, இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோராவிடம் வழங்கினர்.நிகழ்ச்சியில்  பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் பேசும்போது, 'மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'' என்றார்.

அதேவேளை, குறித்த சிறப்பு தபால் தலை ஆஸ்திரேலியாவின் சந்தைக்கு உடனடியாக வந்துள்ளதாகவும், வரும் நாட்களில் தபால் சேவைகளில் இந்த தபால் தலைகள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த தகவல் மம்முட்டி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Advertisement

Advertisement