• Sep 20 2024

"மணிரத்னம் சேர் தான் 30 வருடங்களாக எனக்கு பாஸாக இருந்து வருகின்றார்"...நெகிழ்ந்து பேசிய பிரபலம்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. இத்திரைப்படத்தை பிரமாண்ட இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபலமான பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய 40 ஆண்டுகால தவம் தான் இந்தப் படம் என்று இயக்குநர் மணிரத்னம் மன நெகிழ்வோடு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தின் கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியான நிலையில் நேற்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதற்கான சோழர் காலத்து இசைக்கருவிகளை ஆய்வு செய்து பாலியில் போய் இந்தக் கருவிகளை சேகரித்து அதை வைத்து அவர் படத்திற்கான இசையை கொடுத்துள்ளார். இதற்கான தன்னுடைய டீம் கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் "30 வருடங்களாக இயக்குநர் மணிரத்னம் சார் தனது பாஸாக இருந்து வருகிறார்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருவருக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவருவது குறித்து தான் அவரிடம்தான் கற்றுக் கொண்டதாகவும் ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement