சன் மியூசிக் சேனலில் ஆங்கராக அறிமுகமாகி பின்னர், குக் வித் கோமாளி மணியாகி, இதனைத் தொடர்ந்து இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் தொகுப்பாளினி தான் மணிமேகலை.
மணிமேகலை சின்னத்திரையில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் தனது கணவருடன் அசத்தலான பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட ஒரு பதிவில் "இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் Anchor செய்ய கிளம்பிவிட்டேன், நான் போடவிருக்கும் அடுத்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் உங்களை அமெரிக்கா மணிமேகலையாக சந்திக்கிறேன்" என்று மிகவும் மகிழ்ச்சியோடு பதிவிட்டு ரசிகர்களிடமிருந்து விடை பெற்றிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!