உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தனர் என்பது தெரிந்தது.
அதன் பின்னர் கால்ஷீட் பிரச்சனை மற்றும் சில காரணங்களுக்காக ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சுஹாசினி மணிரத்னம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் மீண்டும் இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் கசிந்தது. ஆனால் தற்போது வந்துள்ள உறுதி செய்யப்பட்ட தகவல் படி ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் ‘தக்லைஃப்’ படத்தில் நடிக்கவில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் இந்த படத்தில் இணைந்தனர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ‘தக்லைஃப்’ படத்தின் ஸ்கிரிப்டிலேயே மணிரத்னம் மாற்றம் செய்திருப்பதாகவும் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரது கேரக்டரையே படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அதன் பின்னர் அவர் புதிய ஸ்கிரிப்ட் தயார் செய்து சிம்பு மற்றும் அசோக்செல்வன் கேரக்டர்களை அதில் இணைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய ஸ்கிரிப்டின் படி படத்தின் 75% கதையில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு மட்டுமே இருப்பார்கள் என்றும் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் கேரக்டர் இல்லாததால் படத்தின் கதையே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் என்றும் கூறப்படுகிறது. தான் நடிக்க வேண்டிய கேரக்டரில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்பதை அறிய ஜெயம் ரவி ஆவலாக இருந்த நிலையில் அவரது கேரக்டர் தூக்கப்பட்டு அவருக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
மொத்தத்தில் மணிரத்னம் என்ன செய்தாலும் அதை தரமான சம்பவமாக செய்வார் என்ற நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் புதிய ஸ்கிரிப்ட், ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!