• Sep 20 2024

இப்படியே போனால் ‘தக்லைஃப்’ படத்தில் இருந்து மணிரத்னமும் வெளியேறிவிடுவார்.. வேலையை காட்டும் ஆண்டவர்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் திடீரென துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் விலகி விட்ட நிலையில் இந்த இருவருக்கு பதிலாக சிம்பு மற்றும் அரவிந்த்சாமி நடித்த இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நிலையாக வில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருப்பதால் இந்த படத்தில் இருந்து இன்னும் சிலர் விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் முறையில் தற்போது அடிமடியில் கை வைக்கும் வகையில் மணிரத்னம் கூட விலக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கமல்ஹாசன் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் திரைக்கதையில் தலையிடுவார் என்பதும் அவர் திரைக்கதையில் தலையிடாத ஒரே படம் ’விக்ரம்’ என்றும் அதனால் தான் அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆனது என்றும் கூறப்படுவதுண்டு. கமல் மிகுந்த மேதாவி என்பதால் அவர் அளவுக்கு யோசித்து திரைக்கதை எழுதுவதால் தான் பாமர மக்களுக்கு புரியும் வகையில் படம் இருக்காது என்றும் அதனால் தான் அவரது பல படங்கள் தோல்வி அடைவது உண்டு என்றும் கூறப்படுவது உண்டு.



இந்த நிலையில் ‘தக்லைஃப்’ திரைப்படத்திலும் மணிரத்னம் அவர்களுடன் சில கதை விவாதங்கள் செய்வதாகவும் சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று கமல் கூறியதாகவும் தெரிகிறது. ஆரம்பத்தில் இதை ஆலோசனையாக ஏற்றுக்கொண்ட மணிரத்னம், ஒரு கட்டத்தில் படத்தின் போக்கே மாறுவதால் கடுப்பாகி விட்டதாகவும் இதனால் அவர் பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலின் தலையீடு இன்னும் அதிகரித்தால் மணிரத்னமே இந்த படத்தில் இருந்து விலகுவார் என்றும் அல்லது கமல்ஹாசனே மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் கமல் மற்றும் மணிரத்னம் இடையே கருத்து வேறுபாடு என்பது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் வேண்டுமென்றே யாரோ கிளப்பி விடும் வதந்தி என்றும் இருவரும் மிகவும் ஒற்றுமையாக இந்த படத்தை நன்றாக கொண்டு வர வேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகவும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement