தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்து முன்னணியில் திகழ்ந்தவர் தான் நடிகர் மணிவண்ணன்.இவர் ஒரு இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது நக்கல் பேச்சு, வில்லத்தனமான நடிப்பு தற்போதும் ரசிகர்கள் மனதில் எப்போதும் நினைவில் இருந்து கொண்டு தான் இருக்கும்.
எனினும் குறிப்பாக அவரது படங்களில் வரும் அரசியல் குறித்த வசனங்கள் தற்போதும் இணையத்தில் பிரபலமானவை தான்.இந்நிழலயில் மணிவண்ணனின் மகன் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் மணிவண்ணன் என்னதான் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும் தன் குடும்பத்தை பார்ப்பதில் வல்லவர் ஆவார், முக்கியமாக மணிவண்ணன் தன் நடிப்பை முடித்து நள்ளிரவில் தான் வீட்டிற்கு வருவாராம், ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டில் எல்லாரும் தூங்கி விடுவார்களாம்.
அப்பவும், `சாப்பிட்டீங்களா கண்ணுங்களா, இன்னைக்கு உங்களோடு சேர்ந்து அப்பாவால் சாப்பிட முடியவில்லை என்று கொஞ்சுவார் என மனம் திறந்துள்ளார். அவரது மகன் ரகுவண்ணன் 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார்.
நடிகர் மணிவண்ணன் தன் சினிமா வாழ்க்கையில் பல கோடிகளில் சம்பாதித்து வைத்துள்ளார் ஆனால் அந்த சொத்தை எல்லாம் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தான் அனுபவித்து வருகிறார்.
ஆனால் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் சினிமாவில் நடித்துவிட்டு சினிமாவே வேண்டாம் என்று தான் அக்காவுடன் சேர்ந்து அவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.
இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதால் அமெரிக்காவில் ஒரு இந்திய ரெஸ்டாரென்ட் துவங்க திட்டம் போட்டு வருகிறாராம்.அங்கும் இந்திய உணவுகள் கிடைப்பது அரிது தான், என்பதனால் இந்த ப்ளானில் குதித்துள்ளனர் என கூறப்படுகின்றது.
Listen News!