• Nov 17 2024

உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் Manjima Mohan- பொண்டாட்டிக்கு உதவி செய்யும் Gautham Karthik- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் வெளியான அச்சன் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மஞ்சிமா மோகன்.1997ம் ஆண்டே கலியூஞ்சல் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா பல படங்களில் சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். 

தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், தேவராட்டம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் கடந்த ஆண்டு கெளதம் கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டார். 


தனது உடல் எடை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மஞ்சிமா இருந்து வந்தாலும், தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாடி ஷேமிங் செய்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறார்.

உடல் எடையை குறைக்க தீவிர வொர்க்கவுட்டில் ஈடுபட்டு வரும் வீடியோவை மஞ்சிமா மோகன் சற்று முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், அதில், ஒரு இடத்தில் அவருக்கு கெளதம் கார்த்திக் உதவி செய்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியொரு கணவனா எனப் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement