• Sep 20 2024

துணிவு பாடலை ட்ரோல் செய்தவர்களுக்கு மஞ்சு வாரியர் கொடுத்த தக்க பதிலடி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின்னர்  நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். 

துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா ஏற்கனவே பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இரண்டாம் பாடல் வெளியிடப்பட்டது.

அத்தோடு காசேதான் கடவுளடா என்ற இந்த பாடலை வைசாக் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சேர்ந்து பாடி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் மொத்த பாடலை பல முறை கேட்டாலும் அதில் மஞ்சு வாரியர் குரல் ஒரு இடத்தில் கூட இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் பற்றி மஞ்சு வாரியர் பதில் அளித்து இருக்கிறார். "எனது குரல் வீடியோ versionக்காக தான் பதிவுசெய்யப்பட்டது, இந்த ட்ரோல்களை என்ஜாய் செய்கிறேன்" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

எனினும் இதன் மூலம் சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.



Advertisement

Advertisement