இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இதனைத் தொடர்ந்து மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது 4 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சு வாரியர். அஜித் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரின் டீம் மேட்டாக நடித்துள்ளார் . இதில் ஏராளமான ஸ்டண்ட் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ள இவர் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அசத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி பொங்கல் ஸ்பெசலாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு நாட்களே உள்ளதால் ப்ரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் அஜித் ப்ரமோஷனுக்கு நோ சொல்லிவிட்டதால், இயக்குநர் வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் துணிவு ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் இயக்குநர் எச்.வினோத்தும், நடிகை மஞ்சு வாரியரும் கலந்துகொண்டனர். அப்போது துணிவு படத்தில் அஜித் பேசிய டயலாக் ஒன்றை பேசிக்காட்டுமாறு நடிகை மஞ்சு வாரியரிடம் தொகுப்பாளர் கேட்டிருந்தார்.
அதற்கு உடனடியாக எழுந்து வந்து, கையில் துப்பாக்கியுடன் அஜித் பேசிய கெட்டவார்த்தை டயலாக்கை பேசிக்காட்டி அதிர்ச்சி கொடுத்தார் மஞ்சு வாரியர். கெட்ட வார்த்தையில் பேசிவிட்டு அதனை பீப் போட்டு விடுமாறு அவர் சொல்லும் வீடியோ வைரலாகி வருகின்றதை காணலாம் .
Listen News!