இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இதில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தில கதாநாயகியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்திருந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.சூரியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் ஆடையே இல்லாமல் கூட விஜய்சேதுபதி நடித்திருந்த காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் என்று கூறப்படுகின்றது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் கமிட்டாகியுள்ளார்.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலமாகத்தான் மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவுக்கே வந்த நிலையில், விடுதலை 2 படத்திலும் மஞ்சு வாரியரை நடிக்க வைக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் ஆக்ஷனில் நடித்து மிரட்டிய மஞ்சு வாரியர் விடுதலை 2 படத்தில் நடித்தால் அவருக்கும் நிர்வாண காட்சி இருக்குமா? என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்திலேயே சிலர் எழுப்பி உள்ளனர். அதே போன்ற காட்சிகள் மஞ்சு வாரியருக்கும் இருக்குமா? அவரது மறைவால் தான் விஜய்சேதுபதி மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!