• Sep 20 2024

பெண் டான்சரை இடுப்பில் வைத்து வளைத்து வளைத்து ஆடும் மன்சூர் அலிகான்- வைரலாகி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் மிகப் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். தன்னுடைய மிரட்டலான பயங்கரமான வில்லத்தனத்தினால் மிரட்டிய இவருக்க திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்தில் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.அந்த வகையில் சரவணன் இருக்க பயமே, குலேபகாவலி, என்ஜிகே, ஜாக்பாட் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பு மட்டுமல்ல டான்சும் சூப்பரா வரும் என்பதை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய விக்ரம் படத்தில் இவரின் "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் சண்டை காட்சியில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

1995ம் ஆண்டு வெளியான அசுரன் பட பாடலை தூசு தட்டி எடுத்து விக்ரம் படத்தில் நுழைந்து தெறிக்கவிட்டிருந்தார் லோகேஷ். சக்கு சக்கு பாட்டிற்கு கலக்கலாக ஆட்டம்போட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்த மன்சூர் அலிகான். டான்ஸ் மாஸ்டர்களுக்கே சவால் விடும் வகையில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/AnandAathiraa/status/1542461152055427074

அந்த வீடியோவில், அட அப்படி இல்லப்பா இப்படி ஆடு என்று தனது குழுவுக்கு சொல்லி கொடுத்தது மட்டும் இல்லாமல், ஒரு பெண் டான்சரை முதுகிலும் இடுப்பிலும் வைத்து வளைத்து வளைத்து ஆடிஉள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement