தமிழ் சினிமாவில் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கே பேர் போன ஒருவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். சுமார் 90 களின் பிரபல முன்னணி வில்லன் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான் தான். இவர் பிரபு நடித்த "வேலை கிடைச்சுருச்சு" என்ற படத்தின் மூலமே நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் வில்லன் கதாபாத்திரத்தின் மூலமாகவே ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார்.
மேலும் இவர் நடிகர் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற படத்தின் மூலமாகவே நட்சத்திர அந்தஸ்தை அடைந்து கொண்டார். அதற்கு பிறகு ஒன்றிற்கு மேற்பட்ட பல மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
இவர் திரையுலகில் மட்டுமன்றி அரசியல் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக 'நாம் தமிழர்' கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
இவ்வாறு சினிமாவில் மட்டுமன்றி, அரசியலிலும் தனது ஆர்வத்தை காட்டி வந்த நடிகர் மன்சூர் அலிகானின் நடன வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் மன்சூர் அலிகான் எதை பற்றியும் நினைக்காமல் செம குத்தாட்டம் போட்டுக் கலக்கியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அது மட்டுமன்றி நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்தும் வருகின்றனர்.
good morning frans. pic.twitter.com/Y9HBL4govH
— prans. (@innahsaar) June 25, 2022
பிற செய்திகள்
- “அடிப்படை அறிவு கூட இல்லையா”… கோவம் கொண்ட நடிகை குஷ்புவின் இளைய மகள்-இது தான் காரணமா..?
- விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் செய்த வசூல் விபரம்..!
- ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த RK சுரேஷ்; இதுதான் காரணமா?
- மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!
- குக்வித்கோமாளி பாலாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா..? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!