விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்படத்திற்காக அனிரூத் இசையில் விஜய் பாடிய நா ரெடி என்கிற பாடலும் வெளியிடப்பட்டது.
நா ரெடி பாடலை விஜய்யுடன் சேர்ந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாரும் பாடி இருந்தார். இப்பாடல் வெளியான உடனே வைரல் ஹிட் ஆனது. இன்ஸ்டாவில் திரும்பிய பக்கமெல்லாம் நா ரெடி பாடலுக்கு நடனமாடி பலரும் ரீல்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த அளவுக்கு ரீச் ஆன இப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளும் வலுத்து வந்தது. இதற்கு காரணம் இப்பாடல் வரிகள் முழுக்க புகையிலை மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது தான்.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சிக்ரெட் பிடித்தபடி நடனமாடும் படியான காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்ததால், இது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் எனக்கூறி அரசியல் வாதிகள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை விஜய்யின் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மன்சூர் அலிகானும் நடித்து வருகின்றார். நான் ரெடி தான் பாடலில் கூட அவர் பிரியாணி சாப்பிடுவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் மன்சூர் அனிகான் தற்பொழுது கார் ஓட்டிக் கொண்டு சென்ற போது இப்பாடலுக்கு வைப் ஆகியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Naa Ready vipe 🕺 #Leo Thalapathy @actorvijay 🕺❤ pic.twitter.com/XRPOlv4QA3
Listen News!