நடிகை திரிஷா மற்றும் மன்சூர் அலிகான் விவகாரம் தரபோஸு பேசும் பொருளாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் " மது போதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடியபோது மானம் போகலயா என்று பயில்வான் ரங்கநாதன் திரிஷாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பாரதிராஜா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், அதில் மன்சூர் அலிகான் நேற்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவையில்லாத ஒன்று, அந்த நேரத்தில் அவர் அமைதியாக இருந்து இருந்தால், அவரே அமைதியாக இருக்கிறார் என்று சிம்மந்தி உருவாகி இருக்கும். ஆனால், மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அனைவரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு எதிராக கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அவர் பேசியது தவறு தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த அளவுக்கு அவர் மீது கண்டனம் தெரிவிப்பது தேவையில்லாத ஒன்று. அவர் எப்போதும் கேலியா, கிண்டலா பேசக்கூடியவர் என்பதால் அப்படி பேசிவிட்டார். அதில் எந்த உள் நோக்கமும் இல்லை. மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை. மனசு கஷ்டமா இருக்கு.
மன்சூர் அலிகான் தவறு செய்திருந்தால், அவருக்கு நோட்டீஸ் கொடுங்க, அழைத்து விசாரியுங்கள் அதைவிட்டுவிட்டு, எதையுமே கேட்காமல் அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுப்பதை நடுநிலையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று, மானம் போய்விட்டது என்று கதறும் திரிஷா, கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் நடுரோட்டில் டான்ஸ் ஆடுனாங்க, அது மட்டுமில்லாமல் திரிஷாவின் நிர்வாண வீடியோ வெளியானது அப்போது எல்லாம் அவருக்கு மானம் போகவில்லையா.
மன்சூர் அலிகான் பேசினா தப்பா ஜெயில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காவாலா பாடலில் தமன்னா கூட ஆடமுடியவில்லை என்று பேசிய இருந்தார். இதை யாராவது தப்பா சொன்னிங்களா ரஜினி பேசினால் தப்பில்லை, மன்சூர் அலிகான் பேசினா தப்பா .இவரும் தமிழ் சினிமாவில் நடிகர் தானே என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மன்சூர் மன்னிப்பு கேட்பாரா அல்லது பிரச்சனை இன்னும் நீளும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!