• Sep 20 2024

மாரிமுத்து இப்படியொரு கல் நெஞ்சக்காரனா?- வாழ்க்கையில் அழுததே இல்லையாம்- இதுவரை தெரிந்திடாத விடயங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.மேலும் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2, சூர்யாவுடன் கங்குவா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.

இவை இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸாகவுள்ளன.பெரிய திரையில் இப்படி பல நடிகர்களுடன் நடித்து புகழடைந்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளத்தை ஏற்படத்தியது சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலே ஆகும்.


இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார்.ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சென்னையில் இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள்வரை இரங்கல் தெரிவித்துவருகின்றனர்


நடிகர் மாரிமுத்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.அதில், தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு என்ற ஊருக்கு பக்கத்துல காடு மேடு எல்லாம் கடந்து போன வரும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த ஊரில் மொத்தமே15 வீடுகள் தான். நான் பிறந்த போது அந்த கிராமத்திற்கு கரேண்ட் இல்லை, எங்கள் கிராமத்தை சுற்றி 10 கிலோ மீட்டருக்கு ஸ்கூல் இல்லை. ஒரு டீ குடிக்க வேண்டும் என்றாலும், வரசநாடுக்கு வந்து தான் டீ குடிக்கனும்.

நான் தினமும் நடந்து வந்து பேப்பர் படிப்பேன், டீ குடிக்கக்கூட காசு இருக்காது, ஓசியில் பேப்பரை மட்டும் படிச்சிவிட்டு, தண்ணியை குடிச்சிவிட்டு மீண்டும் நடந்து ஊருக்கு போவேன். எனக்கு தமிழ் மீது இருந்த காதல், பற்று தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. நான் பத்தாவது படித்துக்கொண்டு இருக்கும் போதுதான் ஊருக்கு கரெண்டே வந்தது. 


படிப்பு மட்டுத்தான் வாழ்க்கையை மாற்றும் என்பது என் மனதில் ஆழமாக இருந்தது. இதனால், ஐந்தாம் வகுப்பு வரை வரசநாடுக்கு சென்று படித்தேன். அதன் பின் ஆறாவதில் இருந்து 10ம் வகுப்பு வரை தினமும் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்தேன். ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் நடப்பேன் அதுவும் வெறும் காலுடன், அப்போது எங்கள் ஊரில் யாரும் செருப்பு போடமாட்டார்கள். நான் காலேஜ் படிக்கும் போது தான் செருப்பேன் போட்டேன் என்றார். 

மேலும், என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் எதற்காகவும் அழுதது இல்லை, என்னை அனைவரும் கல் நெஞ்சக்காரன் என்று தான் சொல்லுவார்கள். நான் என் அப்பா இறந்த போதுக்கூட அழுதது இல்லை, ஆனால், மனசுக்குள் வருத்தம் இருந்தது இருந்தாலும், நான் அதை மனதிற்குள் வைத்துக்கொள்வேன் என்று பேசிய இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement