• Sep 20 2024

ரஜினியின் டயலாக்கை பேசி மாஸ் காட்டிய எதிர்நீச்சல் மாரிமுத்து...!அதுவும் எதுன்னு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, எதிர்நீச்சல். இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பதே இந்த எதிர்நீச்சல் தொடர். இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருவது, ஆதி குணசேகரன் இந்த கேரக்டரில், மாரி முத்து நடித்து வருகிறார். 


நடிகர் மாரி முத்து, எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு முன்பு பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லத்தனமாக ரோல்களிலும் நடித்திருக்கிறார். இவர், ஒரு நடிகராக பிரபலமாக இருந்தாலும், இவரது கதாப்பாத்தரங்களின் பெயர் பெரிதாக வெளியில் தெரியாது. 

ஆனால், இப்போது இவரை ‘எதிர்நீச்சல்’ மாரி முத்து என்றால்தான் பலருக்கும் தெரிகிறது. அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.


அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரு ஐகானிக் காட்சி இடம் பெற்றிருந்தது. ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்த்தை பார்த்து “கொஞ்சம்..இதோட நிறுத்திக்கலாம்ல..” என்று கேட்பார். அதற்கு ரஜினி, “ரொம்ப தூரம் போய்டேன்..Fullஆ முடிச்சிட்டுதான் திரும்பி வருவேன்..” என்பார். இந்த டைலாக் மீம்ஸ் ஆகவும் ரீல்ஸ் ஆகவும் மிகவும் பிரபலமானது. 


தற்போது எதிர்நீச்சல் ஆதி குணசேகரனும் இந்த டைலாக்கை பேசி ரீல்ஸ் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement