நடிகர் மாரிமுத்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட தருணம் அவரை ஒரு கேள்வி கேட்கப்பட்டது "படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருப்பார்கள் என்று சொல்வார்கள் அது பற்றி என்ன கூறுகிறீர்கள்"? என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் படத்தில் ஒரு மாதிரி, நிஜ வாழ்வில் ஒரு மாதிரி என்று இல்லை. நான் ஒரே மாதிரி தான் இருப்பேன். படத்தில் எந்த கதாபாத்திரமும் எனக்கு பிடிக்காது என்று இல்லை, எல்லாமே பிடிக்கும். எல்லாமே கதைக்குள் வரும் ஒரு கதாபாத்திரம் தானே? என்று கூறினார்.
மேலும் மாரிமுத்துவை, "நீங்கள் ஒரு ஸ்டிக்கான போலீஸ் ஆஃபீசர், ஸ்டிக்கான அப்பா, வில்லன் இந்த மாதிரி தான் நடித்து இருக்குறீர்கள். உங்களுக்கு காமெடி படம் நடிக்க விருப்பமா? என்று கேட்டனர். அதற்கு அவர் ஆமா..எனக்கு ரொம்ப பிடிக்கும்.
'நான் ஒரு expert காமெடியன் என்னுடைய காமெடிக்கு எஸ்.ஜே.சூர்யா, சிம்பு எல்லாரும் ரசிகர்கள். சிரிச்சு சிரிச்சு விழுவாங்க' என்றவாறு கூறினார். அதோடு என்னுடைய படங்களில் வடிவேலுவிற்கு கொடுத்த காமெடி சீன் எல்லாமே நான் தான் எழுதினேன்.
வடிவேலு ஏன் நடிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் தேர்தல் விஷயமாக திரிந்தார், அதோடு அவருக்கு நடித்து நடித்து போர் அடித்து விட்டது போல, அவர் இல்லாத இடத்தை சூரி, யோகிபாபு பில்லப் பண்ணிட்டு இருக்காங்க என்று கூறினார்.
ஜாதி ஒழிப்பு படங்கள் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "இப்படியான படம் எடுக்கலாம், தப்பில்லை இந்த காலத்திற்கு இப்படியான படம் எடுப்பது நல்லம் தான். இப்படி படங்கள் இப்ப கூட வர ஆரம்பிக்குது இதனால் ஜாதி ஒழிப்பு கருத்துக்கள் சொல்லப்படுது.1980ற்கு முன்னர் ஜாதி பார்த்து தான் வீடு காட்டுவார்கள், இப்போ எல்லாம் அப்படி இல்லை, பணம் வந்தால் எல்லாமே போய்டும் என்று கூறினார்.
மணிரத்னம் சார் மற்றும் இளையராஜா சார் இணைப்பில் தளபதி படத்தில் பாடல்கள் அருமையாக இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் அவர்கள் பிரிந்து விட்டார்கள், அதன் காரணம் என்ன என்று கேட்டனர்.
அவர்கள் இருவருமே மரியாதையான ஜாம்பவான்கள் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம், அல்லது மணிரத்னம் சாரிற்கு வேறு வகையான பாடல் தேவைப்பட்டிருக்கலாம் அதனால் இவர்கள் இணையாமல் போயிருக்கலாம் என்று கூறினார்.
Listen News!